உலக அன்னையர் தினமான மே 11-ம் தேதியன்று, ‘வாவ் மாம்- 2014’ என்ற பன்முக திறன் போட்டிகள் சென்னையில் நடத்தப்படுகிறது.
ஐரிஸ் நிறுவனமும், யூரோகிட்ஸ் மழலையர் பள்ளியும் இணைந்து, இந்தப் போட்டிகளை நடத்துகிறது. இளையவர் முதல் முதியவர் வரை எல்லா வயது அன்னையர்களும் இந்த போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
ஒன்று முதல் ஐந்து வயதான குழந்தைகளுக்கும் அவர்களின் அன்னையர்களுக்கும் ‘அம்மாவும் நானும்’ என்ற ஓவியப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளை யூரோ கிட்ஸ் நடத்துகிறது. ஓரிபிளேம் நிறுவனம் சரும பராமரிப்பு பற்றிய பயிற்சி பட்டறையை நடத்துகிறது.
இது தவிர சமையல், இசை, சமூக விழிப்புணர்வு, வடிவமைப்புப் போட்டிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் வரும் 10, 11 ஆகிய தேதிகளில் அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் காலை 11 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவருக்கு, ‘வாவ் மாம் - 2014’ என்ற பட்டம் வழங்கப்படும். அதோடு, சிறந்த அம்மா-குழந்தை ஜோடிக்கு ‘அம்மாவும் நானும்’ என்ற பட்டம் வழங்கப்படும்.
இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள மே 9-ம் தேதிக்குள் 9841206506, 9841483511 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். அல்லது சென்னையில் உள்ள யூரோ கிட்ஸ் மையங்களை தொடர்பு கொள்ளலாம். ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இந்நிகழ்ச்சியின் ஊடக கூட்டாளிகளுள் ஒன்றாக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago