ஊழியர் ஒருவருக்கு கரோனா உறுதி: மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்ட கூடுதல் பணியாளர்கள்

By கி.மகாராஜன்

மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் வணிகப்பிரிவு ஊழியர் ஒருவருக்கு கரோனா உறுதியானதை அடுத்து கூடுதல் பணியாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை அடுத்து மதுரையில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பைபாஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக கட்டிடத்தின் ஒரு பகுதியில் இயங்கி வரும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலகம் 3 நாள் மூடப்பட்டது.

இந்நிலையில் அரசு போக்குவரத்து கழக அலுவலக பணிக்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு அடிக்கடி சென்று வந்த அரசு போக்குவரத்து கழக வணிகப்பிரிவு ஊழியர்கள் சிலருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

மதுரையில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் 33 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இதற்கு மாறாக அரசு போக்குவரத்து கழகத்தில் 95 சதவீத பணியாளர்கள் பணிக்கு வரவழைக்கப்பட்டனர். ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைக்கு பயந்து அங்கிருந்த கூடுதல் பணியாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து வணிகப்பிரிவு அலுவலர் கூறுகையில், தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு அலுவல் பணியாக அடிக்கடி செல்லும் 4 ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என்றார்.

இதனிடையே மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 2 நாட்களாக பணிக்கு வந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

ஒருவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற பணியாளர்கள் சோதனைக்கு உட்படுத்தாமல் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தொழிற்சங்கத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்