இந்து தமிழ் ஆன்லைன் செய்தி எதிரொலி: மீண்டும் தேவகோட்டைக்கு மாறிய மாவட்டக் கல்வி அலுவலகம்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டத்தில் திடீரென காரைக்குடிக்கு மாற்றப்பட்ட தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலகம் , இந்து தமிழ் ஆன்லைன் செய்தி எதிரொலியால் மீண்டும் தேவகோட்டைக்கு மாற்றப்பட்டது.

சிவகங்கை வருவாய் மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலகம் 6-வது வார்டு நகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் கரோனா பரிசோதனைக்காக 6-வது வார்டு நகராட்சி உயர்நிலைப் பள்ளியை சுகாதாரத் துறையினர் கையகப்படுத்தியுள்ளனர்.

அங்கு செயல்பட்டு வந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தை தேவகோட்டையில் வேறு பகுதிக்கு மாற்றாமல், திடீரென காரைக்குடிக்கு கல்வித்துறை அதிகாரிகள் மாற்றினர்.

மாவட்டக் கல்வி அலுவலர் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் என்பதாலும் மேலும் பெரும்பாலான ஊழியர்கள் காரைக்குடியில் இருந்து தேவகோட்டைக்கு வந்து செல்வதாலும் அவர்கள் வசதிக்காக அலுவலகத்தையே காரைக்குடிக்கு மாற்றிவிட்டனர் என கல்வித்துறையில் பெரும் சர்ச்சை ஏழுந்தது.

இதுகுறித்து ஜூன் 23-ம் தேதி இந்து தமிழ் ஆன்லைனில் செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்டக் கல்வி அலுவலகத்தை காரைக்குடியில் இருந்து தேவகோட்டை 16-வது வார்டு நடுநிலைப் பள்ளிக்கு மாற்றினர். இதனால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்