சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோரை கைது செய்த போலீஸார் கொடூரமாகத் தாக்கிய தால்தான் அவர்கள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருந்த ஜெயராஜின் உறவினர்கள். படம் மு. லெட்சுமி அருண் இவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக திருநெல் வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன.
இதைத் தொடர்ந்து ஜெயராஜின் 3 மகள்கள் உள்ளிட்ட உறவினர்களும், வியாபாரிகளும் நேற்று பகலில் வாகனங்களில் திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனிடையே உயிரிழந்த வியாபாரிகளின் உறவினர்களிடம் கோவில்பட்டியிலிருந்து வந்திருந்த மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். வியாபாரிகள் இறந்த விவகாரத்தில் தொடர்புடைய போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் வரை உடல்களை பெற மாட்டோம் என்று உறவினர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி அரசு மருத்துவமனை வளாகத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா, செய்தியாளர்களிடம் கூறியது:
சாத்தான்குளம் வியாபாரிகளை கடுமையாகத் தாக்கிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்க வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கையை தமிழக அரசு ஏற்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago