கோவை மக்களிடையே உணவுப் பொருள் தர விழிப்புணர்வு அதிகரிப்பு: அதிகாரிகள் பெருமிதம்

By ஆர்.கிருபாகரன்

கோவை மாவட்டத்தில் உணவுப் பொருள் தரம் குறித்து புகார்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முன்பெல்லாம் உணவுப் பொருட்களில் தரம் குறைவாக இருந்தாலோ அல்லது கலப்படம் இருந்தாலோ லேசான தயக்கத்துடன் அதை உட்கொள்ளும் பழக்கம் இருந்தது. உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும்போது மட்டுமே உணவுப் பொருட்களின் தரம் மீதான கேள்வி எழும் நிலை காணப்பட்டது. ஆனால் இப்போது உணவுப் பொருட்களின் தரம் மீதான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தரம் குறைந்த உணவுப் பொருட்களின் விற்பனை எப்போதுமே இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் அதைக் கண்டறியும் விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது என்கின்றனர் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.

நூடுல்ஸ் மற்றும் பாக்கெட் உணவுப் பொருட்களின் தரம் குறித்து எழுந்த பிரச்சினைகள், பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் உணவுப் பொருட்களின் காலாவதியாகும் காலம், தரம், தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை பார்த்து அவற்றை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நியமன அலுவலர் கதிரவன் கூறியதாவது:

கடந்த 3 ஆண்டுகளாக வழக்கமாக 30 சதவீத புகார்கள் மட்டுமே பதிவாகி வந்தன. ஆனால் இந்த ஆண்டு 9 மாதங்களில் புகார்கள் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது. இதுவரை 57 புகார்கள் வந்துள்ளன. அனைத்துமே எழுத்துப்பூர்வ ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, உணவு பாதுகாப்புத் துறை மீதான நம்பிக்கை, துறை ரீதியான நடவடிக்கை ஆகியவற்றின் பலனால் இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது. இதில், நகர்ப்புறங்களிலிருந்து 70 சதவீத புகார்களும், கிராமப்புறங்களிலிருந்து 30 சதவீத புகார்களும் வருகின்றன.

பலர் மின்னஞ்சல் மூலமும், வாட்ஸ்அப் மூலமும் புகைப்படங்களுடன் புகாரை பதிவு செய்கின்றனர்.

உணவுப் பாதுகாப்புத் துறையில் நேரடியாக புகார் அளிப்பது எப்படி எனத் தெரியாதவர்கள் பத்திரிகை, செய்தி சேனல்கள் வாயிலாக செய்திகளை பதிவு செய்கின்றனர். இதையடுத்து அந்த புகார், துறை ரீதியாக விசாரிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வில் ஊடகங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உணவுப் பொருள் சுகாதாரத்தை காக்கும் வகையில் உணவகங்கள், துரித உணவகங்களில் சோதனை நடத்தி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. துரித உணவு தயாரிப்பு தள்ளு வண்டிக் கடை நடத்துபவர்களுக்கு சுகாதாரம் குறித்து பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நீங்கியது இடையூறு

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு கொண்டு செல்லும் காய்கறிகள், பால் உள்ளிட்டவற்றின் தரம் குறித்த பிரச்சினை கடந்த சில மாதங்களாக நிலவி வந்தது. இந்நிலையில் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய உரிமத்தை கேரள அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக கூறப்பட்டது. இந்நிலையில் முதல் முறையாக இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 300 வியாபாரிகள் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய உரிமத்தை பெற்றுள்ளதாக உணவுப் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 20 வியாபாரிகள் வரை மட்டுமே இந்த உரிமம் பெற்று வந்தனர். கேரள கெடுபிடிகள், துறை ரீதியான நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டு 99 சதவீத வியாபாரிகள் உரிமம் பெற்றுள்ளனர். இதனால் தமிழக உணவுப் பொருட்கள் விற்பனையில் நிலவி வந்த இடையூறு நீங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்