ரயில்ப் பயணிகளின் பயணச்சீட்டு, அடையாள அட்டைகளை கையில் தொடாமலேயே பரிசோதிக்கும் வசதி மதுரை ரயில்வே கோட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் அறிவுறுத்தலின் பேரில், கரோனா தொற்றைத் தடுக்க, ரயில் நிலையங்களில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக டிக்கெட் பரிசோதகர்கள் பயணிகளின் பயணச்சீட்டு, அடையாள அட்டைகளை கையில் தொடாமலேயே பரிசோதிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது,அனைத்து பயணிகளும் தங்களது பயணச்சீட்டு, அடை யாள அட்டைகளை நுழைவாயில் அருகிலேயே பயணச்சீட்டு பரிசோதகர்களால் சோதிக்கப்படுகின்றனர்.
» மதுரை மத்திய சிறையில் கரோனா?- கைதியின் ஆடியோ பேச்சால் பரபரப்பு
» மதுரையில் ஊரடங்கால் உயர்ந்த ‘காய்கறி’ விலை: ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை
பயணிகளுக்கென பிரத்யேக வெப்கேமராவுடன்கூடிய கம்ப்யூட்டர்ஒன்று நிறுவப் பட்டுள்ளது. பயணச்சீட்டு, அடையாள அட்டைகளை வெப் கேமராவில் காண்பித்தால் போதும், மறுபக்கத்திலுள்ள டிக்கெட் பரிசோதகர்களின் கம்ப்யூட்டர்திரையில் விவரங்கள் தெரியும்.
இதை ஆய்வு பயணிகள் அனுமதிக்கப்படுவர்.இந்த வசதி மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை ரயில் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொற்று தடுக்க,எடுத்த இம்முயற்சியை பயணிகள் பாராட்டுவதாக கோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago