பெரம்பலூர் அருகே காதல் திருமணம் செய்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞரை கொலை செய்த வழக்கில் தாய், தந்தை, மகன் ஆகிய 3 பேரை குன்னம் போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள திம்மூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு மகள் திவ்யா (22). இவர் அதே ஊரைச் சேர்ந்த கந்தசாமி மகன் செல்வகுமாரை (25) காதலித்து பெற்றோருக்குத் தெரியாமல் அண்மையில் திருமணம் செய்துகொண்டு, அதே ஊரில் கணவருடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். காதல் திருமணம் செய்தது தொடர்பாக திவ்யா வீட்டாருக்கும், செல்வகுமார் வீட்டாருக்குமிடையே தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், திவ்யாவின் அண்ணன் பாலகுமார் (24), தனது தங்கையின் கணவர் செல்வகுமாரிடம் நேற்று (ஜூன் 22) இரவு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருதரப்பினருக்கும் தகராறு முற்றியதில் பாலகுமார், தனது தங்கை கணவர் செல்வகுமாரை கத்தியால் குத்த சென்றபோது அதை தடுக்க முயன்ற செல்வகுமாரின் நண்பர் மற்றொரு செல்வகுமார் (24) கத்திகுத்து பட்டு பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அரியலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த குன்னம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலகுமார், அவரது தந்தை தங்கராசு, தாய் மகாலட்சுமி ஆகியோரை இன்று (ஜூன் 23) கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago