மதுரையில் முழு ஊரடங்கு: சென்னையைப்போல் ரூ.1000 நிவாரணம் வழங்க வேண்டும்: டிடிவி தினகரன் கோரிக்கை

By செய்திப்பிரிவு

மதுரையில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக அங்குள்ள மக்களுக்கும் சென்னையைப்போல் ரூ.1000 நிவாரணம் வழங்க வேண்டும் சென்னையைப்போல கூட்டம் சேர்க்காமல் நிவாரண நிதி வழங்க வேண்டும் என டிடிவி தினகரன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:

“கொரோனா பரவலைத் தடுப்பதற்காக முழு ஊடரங்கு அறிவிக்கப்பட்டுள்ள மதுரை பகுதி மக்களுக்கும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழங்குவதைப் போல ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னையைப் போல மக்களைக் கூட்டமாக சேர்க்காமல் அவரவர் வீடுகளுக்கே சென்று இந்த நிதியை வழங்கிட வேண்டும். மேலும் மதுரையில் ஊரடங்கு அமலாகும் இடங்களில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் கட்டணமில்லாமல் உணவு அளிப்பதற்கான நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்”. @CMOTamilNadu

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்