கரோனாவால் உயிரிழந்த உணவக தொழிலாளி: உறவினர்கள் 4 பேருக்கு தொற்று உறுதி

By க.ராதாகிருஷ்ணன்

கரோனாவால் உயிரிழந்த உணவக தொழிலாளியுடன் தொடர்பிலிருந்த கரூரை சேர்ந்த அவரது உறவினர்கள் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரூர் வெங்கமேடு விவிஜி நகரை சேர்ந்த 40 வயது நபர் சென்னை தி.நகரில் உள்ள உணவகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். குழந்தைகள் இருவரும் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டில் இருந்தனர். ஊரடங்கு காரணமாக மனைவியை திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி விட்டு கடந்த 19-ம் தேதி கரூர் வந்தவர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தார்.

பரிசோதனையில் அவருக்கு கரோனா இருப்பது உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 20-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, அவருடன் தொடர்பிலிருந்த மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 5-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (ஜூன் 23) உறுதியானது. இதில் கரூரை சேர்ந்த 4 பேர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் மற்றவர்கள் சென்னையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்