பேருந்தில் பயணித்த தம்பதிக்கு கரோனா: அலறியடித்துக் கொண்டு இறங்கிய பயணிகள்

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் நேற்று மாலை காடாம்புலியூர் சென்றுவிட்டு அரசு பேருந்தில் வடலூர் திரும்பிக் கொண்டிருந்தனர். வெளியூரிலிருந்து வந்த இவர்களுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, முடிவு வரவில்லை.

இந்நிலையில் நேற்று பேருந்தில் வந்துகொண்டிருந்த இந்த தம்பதியை தொடர்புகொண்ட சுகாதாரத் துறையினர், அவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்ததுடன், உடனே அரசு மருத்துவமனைக்கு வருமாறு கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதனை பேருந்து நடத்துநரிடம் தெரிவித்தனர். உடனே, ஓட்டுநர் பேருந்தை சாலையோரமாக நிறுத்தினார்.

தம்பதிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அறிந்த பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு பேருந்தை விட்டு இறங்கினர். தொற்று உறுதி செய்யப்பட்ட தம்பதியினர் மட்டும் பேருந்தில் அமர்ந்திருந்தனர். சுகாதாரத் துறையினர் ஆம்புலன்ஸில் வந்து அவர்களை அழைத்துச் சென்றனர். இதற்கிடையே அந்த வழியாக வந்த பிற பேருந்துகளில் ஏறி மற்ற பயணிகள் அங்கிருந்து சென்றனர். அதன் பின்பு, வடலூர் அரசு பணிமனைக்கு பேருந்தை எடுத்துச் சென்று கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்