குமரியில் தனிமனித இடைவெளியுடன் வீடுகளில் சர்வதேச யோகா தினம் கடைபிடிப்பு:முன்னாள் மத்திய அமைச்சர் பங்கேற்பு

By எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தனி மனித இடைவெளியுடன் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் யோகா பயிற்சியில் பங்கேற்றார்.

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் தனிமனித இடைவெளியுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.

வழக்கமாக ஆண்டுதோறும் யோகா தினத்தன்று கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, மற்றும் கல்லூரி, பள்ளி மைதானங்களில் பல ஆயிரம் பேர் பங்கேற்று வந்தனர்.

ஆனால், தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் யோகா தின சிறப்பு நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டது. அதே நேரம் தனிமனித இடைவெளியுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.

நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், களியக்காவிளை, தக்கலை, ஆரல்வாய்மொழி, குலசேகரம் உட்பட மாவட்டத்தில் பரவலான பகுதிகளில் வீட்டு மொட்டை மாடி, மற்றும் வீட்டு வளாகத்தில் குடும்பத்தினர், மற்றும் நண்பர்களுடன் யோகா பயிற்சி மேற்கொண்டு யோகா தின வாழ்த்துக்களை மக்கள் பகிர்ந்து கொண்டனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் அவரது வீட்டு மாடிரயில் தனிமனித இடைவெளியுடன் அரைமணி நேரம் யோகாசனம் செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்