சிவகங்கையில் வேகமாகப் பரவும் கரோனா: ப.சிதம்பரம் கவலை

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கக் காலத்தில் 12 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, அனைவரும் குணமடைந்தனர். தொடர்ந்து வெளி மாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வருவோரைச் சுகாதாரத் துறையினர் பரிசோதித்து வருகின்றனர்.

இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் சிவகங்கை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் சிவகங்கை, இளையான்குடி, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 17 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ''சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவி வருவது கவலை அளிக்கும் செய்தி. சிவகங்கை மக்கள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். தற்காப்பு முறைகளைக் கவனத்துடன் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்