புதுச்சேரி ஜிப்மரில் எம்டி, எம்எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புக்கான ஆன்லைன் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் 133 மையங்களில் நாளை நடைபெறுகிறது.
இது தொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் இன்று (ஜூன் 20) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புதுச்சேரி ஜிப்மர் எம்டி., எம்எஸ், எம்டிஎஸ், பிடிசி மற்றும் பிடிசிசி படிப்புக்களுக்கான ஆன்லைன் நுழைவு தேர்வு நாளை (ஜூன் 21) நடைபெறுகிறது. எம்டி, எம்எஸ் படிப்பில் 125 இடங்களும், எம்டிஎஸ் படிப்பில் 2 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 10 இடங்களும், பிடிசிசி படிப்பில் 12 இடங்களும் உள்ளன. இந்த இடங்கள் ஆன்லைன் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
இந்தியா முழுவதும் 105 நகரங்களில் 133 தேர்வு மையங்களில் நாளை நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. புதுச்சேரியில் மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, கிறிஸ்ட் பொறியியல் கல்லூரி, கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ஆல்பா பொறியியல் கல்லூரி ஆகிய 5 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வு எழுத 16 ஆயிரத்து 357 பேர் பதிவு செய்துள்ளனர்.
எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் படிப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், பிடிஎஸ், பிடிசிசி படிப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் 11 மணி வரையும் தேர்வு நடைபெறும். தற்போது கோவிட்-19 தொற்று நோயைக் கருத்தில் கொண்டு தேர்வைப் பாதுகாப்பாக நடத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜிப்மர் மருத்துவமனையில் மேற்படிப்புக்கு சேர்வதற்கான நுழைவுத்தேர்வை சுமுகமாக நடத்துவதற்கு உதவ அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமைச் செயலர்களை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கோரியுள்ளது.
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படி, நாளை நடைபெறவுள்ள தேர்வுக்கான நோக்கத்துக்காக, ஜிப்மரால் அளிக்கப்பட்ட அட்மிட் கார்ட், கர்பியூ பாஸ் ஆகியவற்றை இ-பாஸ் ஆகக் காண்பித்து தங்களுடைய தேர்வு மையத்துக்குச் சென்றடையலாம்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago