சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 23 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. மேலும் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கக் காலத்தில் 12 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, அனைவரும் குணமடைந்தனர். தொடர்ந்து வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வருவோரை சுகாதாரத் துறையினர் பரிசோதித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 23 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இன்று ஒரே நாளில் 27 பேர் குணமடைந்தனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் அவரவர் வீடுகளுக்கு வழியனுப்பி வைத்தார். மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், நிலைய மருத்துவ அலுவலர்கள் மீனா, முகமது ரபீக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பகல் நிலவரப்படி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 195 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 28 பேர், மற்ற பகுதிகளில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு வந்த 125 பேர், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 42 பேர் உள்ளனர்.
» ஜூன் 19 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்
இதுவரை 132 பேர் குணமடைந்துள்ளனர். இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேர், மற்ற பகுதிகளில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு வந்த 86 பேர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 பேர் உள்ளனர். தற்போது சிகிச்சையில் 88 பேர் உள்ளனர். இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர், மற்ற பகுதிகளில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு வந்த 62 பேர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேர் உள்ளனர்.
மேலும் கர்ப்பிணிகள், முதியோர், தீவிர சிகிச்சை பெறக் கூடியவர்கள் மட்டும் சிவகங்கையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மற்றவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago