சிவகங்கையில் இறந்த டெய்லர் உடலை தானம் செய்ததால், அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது இறுதி சடங்கில் பங்கேற்றோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்றுக்கு சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டு, அனைவரும் குணமடைந்தனர். அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வருவோரை சுகாதாரத்துறையினர் பரிசோதித்து வருகின்றனர்.
இதில் சென்னையில் இருந்து வந்தோர் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இந்நிலையில் இன்று மருத்துவப் பணியாளர் உட்பட 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் ஜீன் 14-ம் தேதி சிவகங்கை மேலூர் ரோட்டைச் சேர்ந்த டெய்லர் காசி (72) இறந்தார். கம்யூனிஸ்ட் - லெனினிஸ்ட் நிர்வாகியாக இருந்தார். அவரது இறுதிச்சடங்கில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். மேலும் அவரது உடலை அவரது குடும்பத்தினர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாகக் கொடுத்தனர்.
இதையடுத்து அவரது உடலை பரிசோதித்து பார்த்தபோது, அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால், அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றோரை சுகாதாரத்துறையினர் தேடி வருகின்றனர். இதனால் இறுதிச் சடங்கில் பங்கேற்றோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், சிவகங்கையில் கரோனா சமூகப் பரவலாகிவிட்டதா என்ற அச்சமும் சுகாதாரத் துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago