கன்னியாகுமரி மேற்கு கடல் பகுதியில் 45 நாள் மீன்பிடி தடைகாலம் தொடங்கியுள்ளதால் நாட்டுப்படகில் பிடிபடும் கரைமடி மீன்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
மேற்கு கடல் பகுதியில் மீன்பிடி தடைகாலம் ஜீன் 1-ம் தேதி முதல் ஜீலை 31-ம் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது.
தற்போது கரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் ஏற்கனவே மார்ச் மாதத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் ஊரடங்கை 15 நாள் அரசு தளர்வு செய்திருந்தது.
மேலும் மேற்கு கடல் பகுதி விசைப்படகு மீனவர்கள் கடந்த 15ம் தேதி வரை மீன்பிடிக்க அனுமதித்திருந்தனர்.
» தென்காசியில் தொடர்ந்து ஏறுமுகத்தில் கரோனா பாதிப்பு: இன்று ஒரே நாளில் 24 பேருக்கு தொற்று உறுதி
» காவிரிக்காகக் கல்லணையில் மணிக்கணக்கில் காத்திருந்த அமைச்சர்கள், ஆட்சியர்கள்!
அதன் பின்னர் 45 நாள் மீன்பிடி தடைகாலம் 15-ம் தேதி நள்ளிரவில் இருந்து தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு கடல் பகுதியில் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களும், கிழக்கு கடல் பகுதியில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகமும் வருகிறது.
தடைக்காலத்தை தொடர்ந்து மேற்கு கடல் பகுதி மீன்பிடி துறைமுகங்களில் விசைப்படகுகள் கரை சேர்ந்தன. இதனால் துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஆழ்கடலில் இருந்து கரைதிரும்பிய விசைப்படகுகளில் மீன்பிடி வலை, மற்றும் பிற உபகரணங்களை மீனவர்கள் வெளியேற்றினர். மேலும் தடைகாலத்தை பயன்படுத்தி படகுகள் பராமரித்தல், மற்றும் உபகரணங்களை சீரமைக்கும் பணி நடைபெறவுள்ளது.
அதே நேரம் கடந்த 15 நாள் ஆழ்கடல் மீன்பிடித்தலில் நல்ல மீன்பாடு இருந்தாலும் கேரளா, மற்றும் பிற மாநிலங்களுக்கு மீன்களை வர்த்தகம் செய்ய முடியாததால் இழப்பு ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். தேக்கமடைந்த மீன்களை உள்ளூரிலேயே மலிவு விலையில் விற்க நேரிட்டது.
தற்போது மீன்பிடி தடைகாலத்தால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாத நிலையில் நாட்டுப்படகு, மற்றும் பைபர் படகுகள் மூலம் குமரி மேற்கு கடல் பகுதியில் மீன்பிடி பணி மும்முரமாக நடந்து வருகிறது. நாட்டு படகுகளில் பிடிபடும் கரைமடி மீன்களுக்கு நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago