சார்பதிவாளர் அலுவலகங்களில் தினமும் 10 ஆயிரம் பத்திரங்கள் பதிவு

By செய்திப்பிரிவு

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், ஜூன் மாதத்தில் தினசரி 10 ஆயிரம் பத்திரப்பதிவுகள் நடைபெறுவதாக பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பத்திரப்பதிவுக்காக பொது மக்கள் ஒரு மண்டலம் விட்டு வேறு மண்டலத்துக்கு பயணிக்கும் போது, எவ்வித இடர்பாடும் இன்றி செல்ல வசதியாக, பத்திரப்பதிவுக்காக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் முன்பதிவு டோக்கன் மற்றும் பதிவுக்கான ஆவண நகலை இ-பாஸ் ஆக பயன்படுத்தலாம் என கடந்த மே 31-ம் தேதி முதல் அரசு அனுமதியளித்துள்ளது.

மேலும், பத்திரப்பதிவின் போது வழங்கப்படும் ரசீதை வீட்டுக்கு மீண்டும் திரும்புவதற்காக இ-பாஸ் ஆக பயன்படுத்தலாம். இதனால் ஆவணப்பதிவுக்கு தங்கு தடையின்றி சென்றுவர வசதி செய்து தரப்பட்டுள்ளது.

மேலும், சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு முடித்து அதற்கானவர்கள் வெளியில் சென்ற பின்னரே, அடுத்த பத்திரப்பதிவுக்கு வந்தவர்கள் உள்ளே அழைக்கப்படுகின்றனர். இதுதவிர கைரேகை பெறும் முன் கைகழுவும் திரவம் கொண்டு கைகள் சுத்தம் செய்யப்படுகிறது.

சார்பதிவாளர் அலுவலக பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் குறைந்த பட்சம் 6 அடி இடைவெளி இருக்கும் வகையில் மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சார்பதிவாளர் அலுவலகங்களில் கரோனா தொற்று பரவாத வகையில் பாதுகாப்பாக பதிவுப் பணி நடைபெறுகிறது. இவற்றின் காரணமாக பத்திரப்பதிவு படிப்படியாக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆயிரத்துக்கும் குறைவாக பதிவு நடைபெற்ற நிலையில், தற்போது தினசரி சராசரியாக 10 ஆயிரம் பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

கடந்த ஜூன் 10-ம் தேதி 12 ஆயிரத்து 883 பத்திரங்கள் மூலம் ரூ.50 கோடியே 7 லட்சமும், 11-ம் தேதி 9 ஆயிரத்து 674 பத்திரங்கள் மூலம் ரூ.36 கோடியே 67 லட்சமும், 12-ம் தேதி 10 ஆயிரத்து 814 பத்திரங்கள் மூலம் ரூ.38 கோடியே 75 லட்சமும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்