கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரான ஜெயச்சந்திரனுக்குக் கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதிவரை கரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 344 ஆக அதிகரித்த நிலையில், 247 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சிய 97 நபர்களில் 19 பேர் அறிகுறிகளுடனும், 78 பேர் அறிகுறி இல்லாத நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதவிர மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வந்த 396 பேர் உளுந்தூர்பேட்டை அருகே தனியார் கல்வி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரான ஜெயச்சந்திரனுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
» ஜூன் 15 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்
» ஜூன் 15-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்
இதைத் தொடர்ந்து இன்று, பிற்பகல் 12 மணிக்கு கோவை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இது தவிர தனிப் பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கரோனா தொற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்குக் கரோனா தொற்று உறுதியானதை அடுத்து விழுப்புரம் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago