சிறுவன் கொலையில் இளைஞர், சிறுமி கைது

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகேயுள்ள சொட்டகவுண்டம் பாளையத் தைச் சேர்ந்த தையல் தொழிலாளி தங்கராஜ்-சுமதி தம்பதியின் மகன்கள் விக்னேஷ் (10), பவனேஷ் (8). இவர்கள் அங்குள்ள அரசுப் பள்ளியில் முறையே 5, 3-ம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று முன்தினம் பவனேஷ் காணாமல் போனார். இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின்பேரில், சிறுவனை ஊத்துக்குளி போலீஸார் தேடி வந்தனர்.

இதற்கிடையில், பல்லகவுண்டம்பாளையம் குளம் அருகே, உயிரிழந்த நிலையில் பவனேஷ் உடல் கிடந்துள்ளது. சடலத்தை மீட்ட ஊத்துக்குளி போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் அஜித் (21) என்பவரும், 17 வயது சிறுமியும் பழகி வந்தது தெரியவந்தது. மேலும், இருவரும் குளத்தின் அருகே தனிமையில் இருந்ததை பவனேஷ் பார்த்துள்ளார்.

ஆத்திரமடைந்த இருவரும், அருகில் கிடந்த பாட்டிலால் பவனேஷை குத்திக் கொலை செய்துள்ளனர். இதையடுத்து, அஜித் மற்றும் அச்சிறுமியை ஊத்துக்குளி போலீஸார் கைது செய்து, திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அஜித் கோவை மத்திய சிறையிலும், சிறுமி சீர்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்