மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் சிகிச்சை அளித்ததால், கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்துக்குப் பின் உயிரிழந்ததாகக் கூறி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி கே.வி.ஆர் நகர் 2-வது வீதியில் வசித்து வருபவர் பாண்டி (29). இவர் கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி மணியம்மாள் என்கிற மணி (26). தம்பதியருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மணியம்மாள் கர்ப்பம் தரித்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, பிரசவத்துக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறைமாதக் கர்ப்பிணியாக அனுமதிக்கப்பட்டார். நேற்று (ஜூன் 12) மாலை 4 மணிக்கு மணியம்மாளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அன்றைய இரவே மணியம்மாள் உயிரிழந்தார்.
மருத்துவர்களின் அலட்சியத்தாலேயே மணியம்மாள் உயிரிழந்ததாக கூறி, இன்று (ஜூன் 13) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் கூறும்போது, "நேற்று மாலை மணியம்மாளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், இரவில் மணியம்மாளுக்கு திடீரென வயிற்று வலி மற்றும் ரத்தக் கசிவு ஏற்பட்டது. ஆனால் பணியில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால், செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர். இதனால், மணியம்மாள் உயிரிழந்தார்.
அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத சூழ்நிலையில், செவிலியர்கள் அலட்சியமாகச் செயல்பட்டதால், மணியம்மாள் உயிரிழந்துள்ளார். ஆகவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தெற்கு போலீஸார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் கூறும்போது, "இறந்த இளம்பெண்ணுக்கு கர்ப்பப் பை சுருங்காததால், உதிரப் போக்கு அதிகரித்தது. மருத்துவர்கள்தான் சிகிச்சை அளித்தனர். செவிலியர்கள் சிகிச்சை அளிக்கவில்லை" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago