சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அகரம் அகழாய்வில் 2 மண் பானைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.19-ம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. ஊரடங்கால் மார்ச் 24-ம் தேதி அகழாய்வு பணியை தொல்லியல்துறை நிறுத்தியது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டநிலையில் மே 20-ம் தேதி மீண்டும் அகழாய்வு பணி தொடங்கியது. மணலூரில் சுடுமண்ணால் ஆன உலை, கீழடியில் விலங்கின எலும்பு, கொந்தகையில் முதுமக்கள்தாழியில் மனித எலும்பு கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில் அகரத்தில் 2 மண்பானைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் ஒன்று முழுமையாகவும், மற்றொன்று உடைந்தநிலையிலும் இருந்தன. இந்த பானைகளின் பயன்பாடு குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago