கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலப் பகுதிகளுக்கு அத்தியாவசிய தேவைகளுக்காக செல்ல இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் இ-பாஸ் சான்று களின் எண்களை பரிசோதனை செய்தபோது, போலி எண்களுடன் இ-பாஸ் இருப்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக ஆய்வு செய்தபோது, காரைக்கால் மெய்தீன்பள்ளி வீதியில் உள்ள இணையதள மையம் ஒன்றில் போலியாக இ-பாஸ் தயாரித்து வழங்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, காரைக்கால் துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன், காரைக்கால் நகராட்சி ஆணையர் எஸ்.சுபாஷ் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று இணையதள மையத்தில் சோதனை செய்தனர். அப்போது, அங்கு போலியாக இ-பாஸ் அச்சடித்து வைத்திருந்ததும், விநியோகம் செய்திருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து, அங்கிருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் அச்சடித்து வைக்கப்பட்டிருந்த இ-பாஸ்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.
காரைக்கால் நகர போலீ ஸார், இணையதள மைய உரிமையாளர் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago