தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஓபிசி (பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட) பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், 50 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கக் கோரிதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக சென்னைஉயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது.

அதன்படி இதுதொடர்பாக திமுகவின் செய்தி தொடர்பாளரான டி.கே.எஸ்.இளங்கோவன் சார்பில், தமிழக மருத்துவ கல்லூரிகளில்உள்ள மருத்துவ படிப்புகளில் இதரபிற்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், “தமிழக மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் இருந்து 960 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் 50 சதவீத இடங்களான 430 இடங்களைப் பெற தமிழகத்தைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு உரிமை உள்ளது.

மத்திய அரசின் 27 சதவீதஇட ஒதுக்கீட்டை பின்பற்றியருந்தாலும் கூட மொத்தமுள்ள 8,137 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 2,197 இடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.எனவே தமிழகத்தில் உள்ளமருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வரை தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் கலந்தாய்வுநடத்த தடை விதிக்க வேண்டும்”என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்