ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று வரை வெளி மாநிலங்களிலிருந்து வந்த 28 பேர் உள்ளிட்ட 118 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஏப்ரல் மாதம் கீழக்கரையைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி உயிரிழந்தார், 73 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். மீதி 44 பேர் ராமநாதபுரம், பரமக்குடி மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதனையடுத்து இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் மற்றும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அலுவலகத்தில் பணியாற்றும் தலா ஒரு பெண் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
» ஜூன் 10 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்
மேலும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்னையிலிருந்து பணி மாறுதலாகி வந்த அலுவலக கண்காணிப்பாளர் கண்ணன் என்பவருக்கும் இன்று கரோனா உறுதி செய்யப்பட்டது.
அதனையடுத்து இவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த 3 அரசு அலுவலர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா தொற்றுக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதுகுளத்தூர் அருகே மேலப்பனையூர் கிராமத்தைச் சேர்ந்த 62 வயது முதியவர் உயிரிழந்தார். இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago