சிவகங்கையில் 52 படுக்கைகளுடன் கூடிய புதிய கரோனா மருத்துவமனை திறக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 8 பேர் குணமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 44 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை ஏற்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து ரூ.30 லட்சத்திற்கு பழைய மருத்துவமனை கட்டிடங்களை சீரமைத்து 52 படுக்கைகள் கொண்ட புதிய கரோனா மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 7 படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளன. இங்கு சுழற்சி முறையில் 124 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மருத்துவமனையை நேற்று கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், எம்எல்ஏ எஸ்.நாகராஜன், மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், நிலைய மருத்துவ அதிகாரிகள் மீனா, முகமதுரபீக், சுகாதார துணை இயக்குநர் யசோதாமணி, மருத்தவமனை கண்காணிப்பாளர் ஷீலா பங்கேற்றனர்.
மேலும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் ராமநாதபுரம் மாவ்டடத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 22 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலபணையூரைச் சேர்ந்த 62 வயது முதியவர் இன்று இறந்தார்.
மேலும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் குணமடைந்தனர். தற்போது 13 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 9 பேர் சிகிச்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago