கரோனா பாதிப்பால் உயிரிழந்த திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகனின் உடல் சுகாதாரத்துறை வழிகாட்டுதலுடன் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட நேரத்தில் தொண்டர்கள் கண்ணீர் சிந்தினர்.
திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான ஜெ.அன்பழகன் இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த திமுக தலைவர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கண்ணீருடன் ஸ்டாலின் வெளியேறினார். பின்னர் தகவலறிந்த கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதிமாறன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்றனர்.
ஜெ.அன்பழகன் உடல் சுகாதாரத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. மூடிய சவப்பெட்டியில் அவரது உடல் பாதுகாப்பாக ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு தி.நகர் கண்ணாம்மாபேட்டை இடுகாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. அவரது உடல் கொண்டு வரப்படுவதை ஒட்டி கண்ணாம்மாபேட்டை இடுகாடு அருகே தொண்டர்கள், பொதுமக்கள் குழுமியிருந்தனர்.
ஆம்புலன்ஸில் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்ட ஜெ.அன்பழகனின் உடல் கண்ணாம்மாபேட்டை இடுகாட்டுக்குள் வந்ததும், இடுகாட்டுக்குள் 4 பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்கிற விதியையும் மீறி நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். அவரது உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி திறக்கப்படாமல், 10 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட குழியில் பாதுகாப்புக் கவச உடை அணிந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் உதவியுடன் இறக்கப்பட்டது.
அவரது உடலுக்கு அவரது மகன் மற்றும் திமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அன்பழகனின் மனைவி, தம்பி, அவரது மனைவி உள்ளிட்டோரும் தனிமைப்படுத்தப்பட்டதால் இறுதிச் சடங்குக்கு வர இயலவில்லை. அதேபோன்று திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சுகாதாரத்துறை வழிகாட்டுதல்படி பங்கேற்கவில்லை. ஜெ.அன்பழகனின் உடல் அவரது தந்தை ஜெயராமன், தாய் பூரணியம்மாள் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
ஜெ.அன்பழகன் உடல் அடக்கம் நடந்த அதே வேளையில், அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், டி.கே.எஸ்.இளங்கோவன், மா.சுப்ரமணியம் உள்ளிட்ட தலைவர்கள் அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago