தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைகளுக்கு படுக்கைகளை கூடுதலாக ஒதுக்க வேண்டும்: சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கரோனா சிகிச்சைகளுக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக எண்ணிக்கையில் படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் சிகிச்சை அளிக்க உரிய வழிமுறைகளை அரசு வெளியிட்டது. மேலும், அரசுமருத்துவமனைகளில் படுக்கைவசதிகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் ஒதுக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் நேற்றுமுன்தினம் நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் 400-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர்கள் பங்கேற்றனர்.

இணையதளத்தில் பதிவேற்றம்

இதில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், “தனியார் மருத்துவமனைகள் தாமாகவே சேவை மனப்பான்மையுடன் முன்வந்து அதிக எண்ணிக்கையிலான படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனையும் ஒரு பொறுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும். அவர், தமிழக அரசின் கரோனா தடுப்பு பணிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள www.stopcorona.tn.gov.in இணையதளத்தின் வாயிலாக மருத்துவமனையில் உள்ள வசதிகள், படுக்கைகளின் எண்ணிக்கைகள், உள்நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் காலியாகவுள்ள படுக்கைகளின் எண்ணிக்கை ஆகியவற்றைஅவ்வப்போது வெளிப்படைத்தன்மையுடன் பதிவேற்ற வேண் டும்.

மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்

இது பொதுமக்கள் மருத்துவமனைகளுக்கு வந்து சிகிச்சைப் பெறுவதற்கு ஏதுவாக அமையும். இப்பேரிடர் காலத்தில் பொதுமக்களிடம் இருந்து அச்சத்தை போக்கிஅரசு மீதும், தனியார் மருத்துவமனைகளின் மீது ஒரு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தும்” என்றார்.

அப்போது, அதிக எண்ணிக்கையிலான படுக்கைகளை கரோனா தொற்று சிகிச்சைக்கு ஒதுக்கீடு செய்வதாகவும் இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் அவ்வப்போது பதிவேற்றம் செய்வதாகவும் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர்கள் தெரிவித்தனர்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்