மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டில் பயறு வகை சாகுபடி பரப்பினை 11500 ஹெக்டேர் பரப்பு அதிகரிக்க வேளாண் துறை திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் த.விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், கள்ளிக்குடி, தே.கல்லுபட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி மற்றும் சேடபட்டி பகுதிகளில் பயறு வகைகளாகிய துவரை, உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு ஆகியவை இயல்பாக 8500 எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
நடப்பாண்டில் பயறு வகை சாகுபடி பரப்பினை 11500 எக்டேர் பரப்பு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதனையொட்டி மதுரை மாவட்டத்தில் பயறு சாகுபடி பரப்பினை அதிகரிக்க தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் பயறு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் மதுரை மாவட்டத்திற்கு மானியத் தொகையாக நிதி ரூ. 73 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் உளுந்து, பாசிபயறு தொகுப்பு செயல்விளக்கத்திடல் அமைக்க ரூ.15 லட்சமும், உயா் விளைச்சல் ரக பயறு வகை விதைகள் விநியோகத்திற்கு ரூ.4.75 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விதைப்பண்ணைக்கு விதை உற்பத்தி மானியமாக ரூ.4.25 லட்சமும், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்து இனத்தில் மானியம் ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரோட்டவேட்டர், விசைத்தெளிப்பான்கள், பிவிசி நீர் கடத்தும் குழாய்
ஆகியவற்றிற்கு ரூ.18.11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல் சாகுபடி வரப்பில் பயறு வகை விதைப்பு செய்வதற்கு ரூ. 2.55 லட்சமும், அறுவடை நேரத்தில் பயன்படுத்திட தார்பாலின் மானியம் ரூ.1.8 லட்சமும், பயறு விதைப்பில் பயிர் எண்ணிக்கை பராமரிக்க விதைப்புக்கருவி மூலம் விதைக்க ரூ. 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் விவசாயிகள் அனைத்து மானியங்களையும் பெற்று பயனடைய அந்தந்த பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago