தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,685 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 914 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 1,256 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று (ஜூன் 9) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட விவரங்கள்:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,685 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 914 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 13 ஆயிரத்து 219 மாதிரிகளும் இதுவரை 6 லட்சத்து 21 ஆயிரத்து 171 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
அதேபோன்று இன்று 12 ஆயிரத்து 421 தனிநபர்களுக்கும் இதுவரை மொத்தமாக 5 லட்சத்து 93 ஆயிரத்து 189 தனி நபர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இன்று மட்டும் 798 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 18 ஆயிரத்து 325 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
16 ஆயிரத்து 279 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும், அரசு மருத்துவமனைகளில் 15 பேரும் என 21 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது.
இன்று இறந்தவர்களுள் 16 பேர் ஏற்கெனவே நாள்பட்ட நோய்களுடன் இருந்தவர்கள். 5 பேர் வேறு எந்த உடல்நலப் பிரச்சினைகளும் இல்லாதவர்கள்.
இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,256 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 545 ஆக உயர்ந்துள்ளது.
44 அரசு பரிசோதனை மையங்கள், 33 தனியார் பரிசோதனை மையங்கள் என, மொத்தம் 77 கரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.
இவ்வாறு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago