தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் இரண்டு முதுமக்கள் தாழிகளும், கை மூட்டு எழும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில் அகழாய்வு பணிகள் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் 4 பகுதிகளாக அளவீடு செய்யப்பட்டு குழிதோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக தொல்லியல் துறையின் ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குநர் ஜே.பாஸ்கரன் மேற்பார்வையில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், இன்று இரண்டு முதுமக்கள் தாழிகளும், அதன் அருகே 2 கை மூட்டு எழும்புகளும் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
» ஜூன் 8 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்
» காத்தாடும் கொடைக்கானல், ராமேஸ்வரம்: பேருந்துகள் இயங்கினாலும் சுற்றுலாவுக்குத் தடை
சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகளையில் 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago