அமைச்சர் கே.சி.கருப்பணன் எட்டு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருப்பது நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்குரியது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூன் 8) வெளியிட்ட அறிக்கை:
"சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென்று இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மனுத்தாக்கல் செய்துள்ளது. மத்திய பாஜக அரசின் விவசாயிகள் நலன்களுக்கு விரோதமான இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஐந்து மாவட்ட விவசாயிகளின் தொடர் போராட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் நடத்திய பலகட்ட போராட்டத்தின் விளைவாக எட்டு வழிச்சாலை தொடர்பான பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன.
சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் வழங்கிய தீர்ப்பில் இத்திட்டம் தொடர்பாக உரிய முறையில் ஆய்வு செய்யாமலும், அவசர கோலத்தில் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும், சுற்றுச்சூழல் ஒப்புதல் முன்கூட்டியே பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், வனங்கள் மற்றும் விலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் இத்திட்டம் தொடர்பான அரசின் அறிக்கையை ரத்து செய்ததுடன், இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தடை விதித்தும் 8.4.2019 அன்று தீர்ப்பளித்தது.
மத்திய அரசு 2019 ஜூலை 3-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறித்து சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையாகும்.
சென்னை உயர் நீதிமன்றம் எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்துள்ள நிலையில், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருப்பது நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. எனவே, சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தைக் கைவிட வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது".
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago