செய்தி வாசிப்பாளர் வரதராஜன் என்னுடன் வந்து எந்த தனியார் மருத்துவமனையில் படுக்கை இல்லை என நிரூபிக்க வேண்டும். தவறான தகவலைப் பரப்பிய வரதராஜன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
செய்தி வாசிப்பாளர் வரதராஜன் சமீபத்தில் ஒரு காணொலி வெளியிட்டார். அதில், ''சென்னையில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட தனது உறவினருக்கு எந்த மருத்துவமனையிலும் அனுமதி கிடைக்காததால் மிகவும் சிரமப்பட்டோம். சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என்கிற நிலையில் பொதுமக்கள் தயவுசெய்து ஜாக்கிரதையாக இருங்கள். வெளியில் அவசியமின்றி செல்லாதீர்கள். அப்படிச் சென்றால் முகக்கவசம், தனிநபர் இடைவெளி முக்கியம்'' என்று பேசியிருந்தார். செய்தி வாசிப்பாளர் வரதராஜன் வெளியிட்ட காணொலி வைரலானது.
சென்னையில் இன்று கரோனா தடுப்புப் பணி குறித்து அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், காமராஜ், அரசுத்துறை செயலர்கள், காவல் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்குப் பின் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் வரதராஜன் வெளியிட்ட காணொலி குறித்து கடுமையாக விமர்சித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“செய்தி வாசிப்பாளர் வரதராஜன் குற்றச்சாட்டில் துளி கூட உண்மையில்லை. தமிழக சுகாதாரத்துறையின் செயல்பாட்டைக் குற்றம் சொல்வதில் வரதராஜனுக்கு என்ன சந்தோஷம். எந்த மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பிவிட்டன என்று வரதராஜன் தெளிவுபடுத்த வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை என்றால் அதை நிரூபிக்க செய்தியாளர் வரதராஜனை என்னுடன் நேரடியாக மருத்துவமனைக்கு வரச் சொல்லுங்கள். நான் அழைத்துச் செல்கிறேன்? பாராட்டவில்லை என்றாலும் செய்தியாளர் வரதராஜன் தவறான தகவலைப் பரப்பக்கூடாது.
செய்தியாளர் வரதராஜன் மீது தவறான தகவல் பரப்பியதாக நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பரவும் காலத்தில் பொறுப்பு இல்லாமல் நடந்து கொண்டுள்ளார். அவர் எந்த அரசுச் செயலரைத் தொடர்புகொண்டார் எனத் தெரிவிக்க வேண்டும். பெருந்தொற்று நோய் தொற்று சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா நோயாளிகளுக்கு படுக்கை இல்லை என்கிற நிலையே இன்று இல்லை. 56 சதவீதம் பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். 84 சதவீத தெருக்களில் கரோனா தொற்று இல்லை. 6000 தெருக்களில் மட்டுமே தொற்று உள்ளது. இதுகுறித்து ஆதரவாக ஒரு விஷயம் பதிவு செய்யப்பட்டுள்ளதா?
பாசிட்டிவாக வந்து அனுமதி கிடைக்காமல் காத்திருக்கும் ஒரு நோயாளியைச் சொல்லுங்கள். எத்தனையோ ஆயிரம் பேரை குணப்படுத்தியுள்ளோம். அந்த வீடியோவை யாரவது போட வேண்டியது தானே. 56 சதவீதம் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். எப்படி இந்தக் குற்றச்சாட்டை வரதராஜன் சொல்கிறார். ஓமந்தூரார் மருத்துவமனையில் ஒரே நாளில் 500 படுக்கைகள் கொண்டு வந்தோம்.
உலக நாடுகளே இன்று தவித்துக்கொண்டிருக்கிறதே. இன்று சாதாரண தமிழ்நாட்டில் பொதுமக்களைக் காக்க அரசு போராடிக்கொண்டிருக்கிறது. வரதராஜன் அவசர கால நிலையில் பொதுத் தளத்தில் வதந்தி கிளப்பினால் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
பத்திரிகையாளர்கள் எவ்வளவு பேருக்கு நோய் வந்தது. யாருக்காவது படுக்கை கிடைக்காமல் இருந்ததா சொல்லுங்கள். இன்று அரசு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் யாரும் குடும்பத்தாருடன் இல்லை. 7 நாள் சிகிச்சை, 7 நாள் தனிமைப்படுத்தல் தானே நடக்கிறது. அரசைப் பொறுத்தவரை 24/7 கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கிறோம். தயவுசெய்து விமரசனத்திற்கான நேரம் இது அல்ல. வரதராஜனும் இதை உணர வேண்டும்.
முதல்வர் சொன்ன அன்று 5 பேர் வென்டிலேட்டரில் இருந்தார்கள். தற்போது 6 பேர் வென்டிலேட்டரில் உள்ளனர். அனைத்துத் தகவல்களையும் அறிக்கையாகத் தருகிறோம்”.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago