இந்தியா-பாக். எல்லையில் துப்பாக்கி சண்டை- சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீர மரணம்

By செய்திப்பிரிவு

இந்தியா-பாகிஸ்தான் எல்லையான ஜம்முவில் நேற்று முன் தினம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் வீர மரணம் அடைந்தார்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையான ஜம்மு காஷ்மீரில் உள்ள சுந்தரபாணி பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில், சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தூர் ஊராட்சி வெத்தலைக்காரன் காடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன்( 40) துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இவர் கடந்த 1999-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து அவில்தாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

ராணுவ வீரர் மதியழகன் உடலை இன்று சொந்த ஊருக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முதல்வர் நிவாரண நிதி

மதியழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, அவரது குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இதேபோன்று, பாமக நிறுவனர் ராமதாஸும் மதியழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்