நாகர்கோவிலில் சீனக் கொடி எரிப்புப் போராட்டம்: இந்து மக்கள் கட்சியினர் 5 பேர் கைது

By எல்.மோகன்

நாகர்கோவிலில் சீன இறக்குமதி பொருட்களைப் புறக்கணிததும், சீனப் பொருட்கள் விற்பனைக்கு தடை கோரியும் இந்து மக்கள் கட்சியினர் சீன கொடி எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

உலக அளவில் சீனா வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் இருந்துவருகிறது.

இந்தநிலையில், சீன நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை இந்தியா புறக்கணிக்க வேண்டும். சீன பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் சீன கோடி எரிப்பு போரட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில் அண்ணா சிலை முன்பு நேற்று போராட்டத்திற்கு இந்து மக்கள் கட்சியின் கமரி மாவட்ட தலைவர் சுபா முத்து தலைமை தாங்கினார்.

சீனாவைக் கண்டித்து கோஷம் எழுப்பிய அவர்கள், சீனக் கொடியை தீவைத்து எரித்தனர். அப்போது அங்கு நின்ற போலீஸார் உடனடியாக தீயை அணைத்தனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 5 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தின் போது சீன கொடியை எரித்தது மட்டுமல்லாமல் சீனப் பொருட்களை அடித்து உடைத்தும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்