சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகை அகழாய்வுக்கு அருகிலேயே தனியார் நிலத்தில் முதுமக்கள் தாழியில் அமர்ந்த நிலையில் மனித எலும்பு கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.19-ம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே குழிகள் தோண்டப்பட்டன. மணலூரில் பணிகள் தொடங்கவில்லை. மேலும் ஊரடங்கால் மூன்று இடங்களிலும் மார்ச் 24-ம் தேதி அகழாய்வு பணியை தொல்லியல்துறை நிறுத்தியது.
இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டநிலையில் மே 20-ம் தேதி மீண்டும் கீழடி, அகரத்தில் அகழாய்வு பணி தொடங்கியது. தொடர்ந்து மே 23-ம் தேதி முதல் முறையாக மணலூரிலும் பணிகள் தொடங்கின. மே 27-ம் தேதி கொந்தகையில் பணி தொடங்கியது. ஊழியர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பணி செய்து வந்தனர்.
» தனிமை முகாம் மன உளைச்சலைப் போக்க புத்தகங்கள்: தூத்துக்குடி மாநகராட்சி ஏற்பாடு
» தனியார் சூரிய மின் திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு: கார்த்தி சிதம்பரம் எம்.பி. நேரில் ஆய்வு
இந்நிலையில் மே 28-ம் பெய்த பலத்த மழையால் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை அகழாய்வு நடந்த இடங்களில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து 4 இடங்களிலும் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன. தண்ணீர் வற்றியநிலையில் சிலதினங்களுக்கு முன் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கின.
மணலூரில் தோண்டப்பட்ட ஒரு குழியில் சுடுமண்ணால் ஆன உலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருதினங்களுக்கு முன்பு, கீழடியில் விலங்கின எலும்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று கொந்தகையில் அகழாய்வு நடக்கும் இடத்திற்கு அருகிலேயே கதிரேசன் என்பவரது நிலத்தில் தென்னை மரக்கன்றுகள் வைப்பதற்காக குழி தோண்டப்பட்டது.
அப்போது முதுமக்கள் தாழியில் அமர்ந்த நிலையில் மனித எலும்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏற்கெனவே கொந்தகை அகழாய்விலும் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன்மூலம் கொந்தகை பழங்கால தமிழர்களின் ஈமக்காடாக இருந்துள்ளது என்பது உறுதியாகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago