தமிழகத்தில் இன்று 1,384 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 256 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்றைய தினம் (ஜூன் 4) தொற்று நிலவரம் குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"தமிழகத்தில் இன்று 1,384 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 256 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 447. இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 44 ஆயிரத்து 981.
» 10-ம் வகுப்புத் தேர்வு எழுத வந்த மாணவிக்கு கரோனா; இதுவரை தப்பிய கொடைக்கானலும் சிக்கியது
இன்று மட்டும் பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 991. இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 20 ஆயிரத்து 286.
44 அரசு பரிசோதனை மையங்கள் மற்றும் 30 தனியார் பரிசோதனை மையங்கள் என மொத்தம் 74 பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன.
இன்று மட்டும் 585 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 14 ஆயிரத்து 901 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்று மட்டும் 12 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஏற்பட்டுள்ள தொற்றுகளில் அதிகபட்சமாக சென்னையில் 1,072 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 693 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது மொத்தம் 12 ஆயிரத்து 132 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்".
இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago