மதுரை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 22 கரோனா நோயாளிகள் குணமடைந்து இன்று வீட்டிற்குத் திரும்பினர்.
மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 276 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கரோனாவால் பாதிக்கப்பட்ட மிக மோசமான நோயாளிகள் இங்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
இதுவரை சிகிச்சை பலனளிக்காமல் 2 கரோனா நோயாளிகள் மட்டுமே மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் அனைவரும் சிகிச்சையில் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிய வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று குணமடைந்த 22 கரோனா நோயாளிகள் சிகிச்சை முடிந்து, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில், மதுரையைச் சேர்ந்த 10 பேர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர் தேனியைச் சேர்ந்த ஒருவர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் உள்பட 22 பேர் குணமடைந்தனர்.
அவர்கள் அனைவரையும் டீன் சங்குமணி மற்றும் மருத்துவக் குழுவினர் வீட்டிற்கு வழியனுப்பி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago