கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் கரோனா தொற்றால் உயிரிழப்பு

By எஸ்.நீலவண்ணன்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் கரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரது உடல் விழுப்புரத்தில் எரியூட்டப்பட்டது.

தமிழகத்தில் நேற்று (ஜூன் 3) ஒரே நாளில் 1,244 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 872 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு நேற்று 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 254 பேர் பாதிக்கப்பட்டு, 136 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 118 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்திற்குட்பட்ட 47 வயதுடையை அரசு பேருந்து ஓட்டுநருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டு கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் நேற்று இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வருவாய்துறையினர் மற்றும் இறந்தவரின் உறவினர்கள் முன்னிலையில் விழுப்புரம் நகராட்சியின் மின்மயானமான 'முக்தி'யில் எரியூட்டப்பட்டது.

இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு என்பதும், இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்