ராமநாதபுரத்தில் 150 பேருந்துகள் மட்டுமே இயக்கம்: கரோனா அச்சத்தால் பயணிகள் வரத்து குறைவு 

By கி.தனபாலன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 150 பேருந்துகள் இயக்கப்பட்டாலும், குறைந்தளவிலான பயணிகளே பயணிக்கும் நிலை இருந்தது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் ராமநாதபுரம் கோட்டத்தில் உள்ள 6 கிளைகளிலும் மொத்தம் 323 பேருந்துகள் உள்ளன. இவற்றில் இன்று நகர, புறநகர் பேருந்துகள் 150 இயக்கப்படுகிறது. இது 50 சதவீதத்திற்கும் குறைவாகும்.

இருந்தபோதும், பேருந்துகளில் குறைவான எண்ணிக்கையிலே பயணிகள் பயணித்தனர். சில பேருந்துகளில் 2 அல்லது 3 பயணிகளே பயணிக்கும் நிலை இருந்தது. சராசரியாக ஒரு பேருந்தில் 15 பேர் பயணித்ததாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்படும் பணிகளை ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் இன்று ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாவட்டத்தில் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்தில் 60 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

பயணத்தின்போது சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும், முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்படுகிறது. தொடர்ந்து பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி, தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

மாவட்டத்தில் இதுவரை 6,371 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 47 பேர் குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர். மீதி 36 பேர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரது உடல்நிலையும் சீராக உள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார்" எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்