தமிழக அரசு அறிவித்தபடி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து இன்று தொடங்கியது.
அதன்படி, தென்காசி மாவட்டத்தில் 50 சதவீத பேருந்து போக்குவரத்து தொடங்கியது. பேருந்துகளில் 60 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருந்த நிலையில் பெரும்பாலான பேருந்துகளில் 60 சதவீதத்துக்கும் குறைவான பயணிகளே பயணித்தனர்.
சில பேருந்துகளில் ஓரிருவர் மட்டுமே பயணம் செய்தனர். அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் போன்றோரே பேருந்துகளில் அதிக அளவில் இருந்தனர். மதிய நேரத்தில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க தென்காசி காய்கறி சந்தை மூடப்பட்டு, பழைய பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தை இயங்கி வருகிறது. இதேபோல், மீன் மற்றும் இறைச்சி சந்தை தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வருகிறது.
இன்று பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில், காய்கறி மற்றும் இறைச்சி சந்தைகளும் பேருந்து நிலையத்தில் வழக்கம்போல் இயங்கின.
தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் இட வசதி குறைவாக இருக்கும் நிலையில் பேருந்துகளும் வந்து செல்வதால் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago