தடைக்காலம் முடிந்தும் கடலுக்கு செல்லாத புதுவை மீனவர்கள்; போக்குவரத்து தொடங்காததால் சிக்கல்

By செ.ஞானபிரகாஷ்

மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் கடலுக்கு மீன்பிடிக்க புதுச்சேரி மீனவர்கள் இன்று செல்லவில்லை. மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக தொடங்காததால் மீன் விற்பனையில் சிக்கலாகும் என்பதாலும் தாமதம் ஏற்பட்டுள்ளது

கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது.

கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. ஆனால், கரோனா காரணமாக மார்ச் 20-ம் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாத காரணத்தினால் மீன்பிடி தடை காலத்தை இம்முறை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனடிப்படையில் மீன்பிடி தடைக்காலம் மே 31-ம் தேதியுடன் நிறைவு பெறும் என மத்திய அரசு அறிவித்தது. மேலும், இதன்படி இன்று (ஜூன் 1) முதல் மீன்பிடிக்க செல்லலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில் இன்று புதுவையில் மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதுவையில் உள்ள 18 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.

இதுதொடர்பாக மீனவர்களிடம் விசாரித்தபோது, "மத்திய அரசு திடீரென தடை காலத்தை குறைத்துள்ளது. ஆனால், படகுகளை சீர்செய்யும் பணி இன்னும் முடியவில்லை. படகுகளை சீர் செய்துவிட்டு வருகிற 5-ம் தேதி மீன்பிடிக்க செல்லலாம் என்று எண்ணுகிறோம்" என்றனர்.

மீன் வர்த்தகர்கள் தரப்பில் விசாரித்தபோது, "புதுவையை பொறுத்தவரை ஆழ்கடலில் விசை படகுகளில் சென்று பிடிக்கும் மீன்களை கேரளா சேர்ந்த வியாபாரிகளே வாங்கி செல்வர். மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து இன்னும் தாராளமாக தொடங்காத நிலையில் மீன்களை விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டும் மீனவர்கள் முடிவெடுத்திருப்பார்கள் என்று தெரிகிறது" என்று தெரிவித்தனர்.

அதே நேரத்தில் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடங்கும் வரை மீன்பிடிக்க செல்ல மாட்டோம் என காரைக்கால் மீனவ பஞ்சாயத்தார் அறிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்