'ஊரடங்கிலும் பெண்கள் பொருளாதாரம் மேம்பட கரோனா சிறப்பு கடனுதவி அளித்த முதல்வர்': அமைச்சர் ஆர்பி.உதயகுமார் புகழாரம்

By என்.சன்னாசி

ஊரடங்கிலும் பெண்கள் பொருளாதாரம் மேம்பட கரோனா சிறப்பு கடனுதவி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை திருமங்கலத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், சுய உதவிக் குழுக்களுக்கு கரோனா சிறப்பு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.52.50 லட்சம் கடனு தவியை வழங்கி பேசியதாவது:

கரோனா தடுப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வேளையில், ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மேம்படவும் முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சிறப்பு கடனுதவி அளித்தால் பொருளாதாரம் மேம்படும்போது, கிராமப் பொருளாதாரமும் மேம்படும் என்றும், பெண்களால் குடும்பம், சமுதாயம் மேம்படும் என்ற எண்ணத்திலும் தான் சுய உதவிக்குழுக்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே உருவாக்கினார்.

இதன்படி, ஊரகப் புத்தாக்க திட்டத்தில் மதுரை மாவட்டத்திற்கென ஊரகத் தொழில் மேம்பாடுக்கு ரூ. 10 கோடியை கரோனா சிறப்பு நிதியாக முதல்வர் ஒதுக்கியுள்ளார்.

இதன்மூலம் முகக்கவசம் தயாரித்தல், கிருமிநாசினி , கைகழுவும் சோப்பு, ஆடை தயாரித்தல், பால்வள மேம்பாடு, சிறு உணவகம் நடத்துதல், வேளாண் பொருட்கள் விற்பனை, சிறிய மளிகைக் கடை வைத்தல், கணினி சார்ந்த தொழில்கள் உட்பட பல்வேறு தொழில்களின் மேம்பாடுக்கு இச்சிறப்பு நிதி பகிரந்து வழங்கப்படும்.

இதன்மூலம் ஊரகப் பொருளாதாரம் வளர்ந்து, தொழில்களும் எழுச்சி பெறும். மக்களும் வருமானத்தில் முன்னேற்றம் காண்பர். இந்த கடனுதவியை உரிய முறையில் பயன்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

வருவாய் அலுவலர் செல்வராஜ், மகளிர் திட்ட அலுவலர் பிரபா கரன், புத்தாக்க திட்ட செயலர் அலுவலர் செந்தில்குமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்