வெளியூர்களில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த 8 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து வந்த ஸ்ரீவைகுண்டம் அருகே ராமானுஜம் புதூரைச் சேர்ந்த 33 வயது ஆண், அவரது மனைவி (28), திருச்செந்தூர் தெற்கு மரந்தலையை சேர்ந்த 48 வயது ஆண், அவரது 16 வயது மகன், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த 33, 40 வயது பெண்கள் ஆகியோர் கோவில்பட்டி கல்லூரிகளில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் 6 பேருக்கும் நடத்தப்பட்ட சளி மாதிரி பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதே போல், பெங்களூரு சென்று வந்த கோவில்பட்டி வஉசி நகரை சேர்ந்த 52 வயது ஆண் அவரது வீட்டிலும், சென்னையில் இருந்து வந்த எட்டயபுரம் அருகே மேலக்கரந்தையை சேர்ந்த 28 வயது ஆண் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்கள் 2 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 8 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago