விவசாய கூலி வேலைக்கு சென்று ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து வரும் இளைஞர்கள் குழுவினர்

By பெ.பாரதி

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் உள்ள ஏழை,எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர் இளைஞர்கள் குழுவினர்.

100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உள்ள இந்த குழுவில் சிலர் நிறுவனங்களிலும், விவசாய பணியினையும் மேற்கொண்டு வருகின்றனர். சிலர் சிலர் கல்லூரிகளில் பயில்பவர்களாகவும் உள்ளனர். ஊரடங்கு காரணமாக நிறுவனங்களும், கல்லூரிகளும் மூடப்பட்ட நிலையில், வேலைக்கு செல்ல முடியாமல் இந்த இளைஞர்கள் வீட்டில் முடிங்கியுள்ளனர். இந்த நிலையில், ஏழை, எளிய மக்களுக்கு உதவ முன்வந்து தங்களிடமிருந்த தொகையை கொண்டு முதற்கட்டமாக பொய்யூர் கிராமத்தில் 110 குடும்பங்களை சேர்ந்த பழங்குடி இன மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி, மாஸ்க் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

தொடர்ந்து, பல கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்ய முடிவெடுத்த அவர்கள், தொடர்ந்து நிதியை திரட்ட விவசாய கூலி வேலைக்கும் சிலர் சென்று, அதில் கிடைத்த தொகையை கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

இவர்கள் செய்து வரும் சேவையை கண்ட சென்னையை சேர்ந்த எண்ணங்களின் சங்கமம் நிறுவனரும், சில சமூக ஆர்வலர்களும், ஆசிரியர்களும் குறிப்பிட்ட தொகையினை வழங்கியுள்ளனர்.

இதன் மூலம், அரியலூர், ஒரத்தூர், வி.கைகாட்டி, மேலவண்ணம், காத்தான்குடிகாடு, ஜெயங்கொண்டம், நெரிஞ்சிக்கோரை என பல்வேறு கிராமங்களில் வசிக்கும் 600 ஏழை, எளிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளனர்.

இந்த இளைஞர்களின் ஒருங்கிணைப்பாளர் நெரிஞ்சிக்கோரை இளவரசன்(36) கூறுகையில்: கடந்த 2015 ம் ஆண்டு மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதற்காக இந்த குழுவை தொடங்கினோம். இதுவரை அரியலூர் மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளையும் விதைகளையும் நடவு செய்து அவற்றினை தொடர்ந்து பராமரிப்பு செய்து வருகின்றோம்.

தற்போது, கரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாக வேலையின்றி ஏழை, எளியமக்கள் பலரும் உணவுக்காக சிரமப்படுவதை கண்டோம். இதனையடுத்து உதவி செய்யவேண்டும் என்றஎண்ணம் எங்களிடம் தோண்றியது. குழுவில் உள்ளஅனைவரும் ஒன்று சேர்ந்து பேசினோம். மேலும், இந்த குழுவில் உள்ளபலரும் விவசாயகுடும்பத்தை சேர்ந்தவர்கள். உதவிசெய்வதற்காக பலஇளைஞர்கள் விவசாயகூலி வேலைக்கு சென்று அதில் கிடைத்த தொகையை கொடுத்துள்ளனர். எங்களது உதவியை பெற்ற மக்களை எங்களை வாழ்த்தியது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. எங்கள்பணி தொடரும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்