சிவகங்கை அரசு அலுவலகங்களுக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டோர் முகாம்: ஊழியர்கள் அதிருப்தி

By இ.ஜெகநாதன்

சிவகங்கை அரசு அலுவலகங்களுக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டோரை தங்க வைத்ததால் ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு, அழைத்து வரப்பட்டனர்.

அவர்களுக்கு எடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் மகாராஷ்டிரா, மேற்குவங்க மாநிலங்களில் இருந்து வந்த 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பலர் குணமடைந்தநிலையில், 5 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லாதவர்கள் காரைக்குடி அமராவதிப் புதூர் , சிவகங்கை சமுதாயக் கூடம், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி, அரசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் சிவகங்கை சமுதாயக் கூடம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது.

மேலும் சமுதாயக் கூட்டம் அருகிலேயே வட்டார போக்குவரத்து அலுவலகம், தபால்நிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம், ரேஷன்கடை உள்ளிட்டவை உள்ளன. அரசு அலுவலகங்களுக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டோரை தங்க வைத்துள்ளதால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அவர்களை மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதிகளில் தங்க வைக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்