தென் தமிழகத்தில் முக்கியமான மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டுக்கு தேனி, திண்டு க்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் 100 லாரிகள், 25 வேன்களில் காய்கறிகள் விற் பனைக்கு வருகின்றன. கரோனா ஊரடங்கால் காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக மாட்டுத்தாவணி பஸ்நிலையம் மற்றும் அம்மா திடலில் செயல்படுகின்றன.
காய்கறிகள் வழக்கம்போல் விற்பனைக்கு வந்தாலும் அதை வாங்க சிறு, குறு வியாபாரிகள், பொதுமக்கள் முன்பு போல் வரவில்லை. ஊரடங்கு தொட ங்கிய பிறகு முதல் 2 மாதம் வரை காய்கறிகள் கடும் கிராக்கியுடனே விற்றன. ஒவ்வொரு காய்கறியும் கிலோ ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனையாகின. அதனால், தொடக்கத்தில் விவசாயிகளுக் கும், வியாபாரிகளுக்கும் கரோனா ஊரடங்கு பெரும் லாபத்தை அள்ளிக் கொடுத்தது.
ஊரடங்கு ஓரளவு தளர்த்தப் பட்டபோதிலும் வேலையிழப்பு, வருமானம் குறைவால் மக்க ளிடையே பணப்புழக்கம் குறைந்துவிட்டது. அதனால், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை முதல் இரவு வரை திறந்து வைத்திருந்தாலும் கூட்டம் இல்லை.
மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் சில்லறை வியாபா ரிகள், பொதுமக்கள் வராமல் காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், காய்கறிகள் அழுகுகின்றன. மாட்டுத்தாவணி மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன் கூறியதாவது:
காய்கறி விலை குறைவுக்கு ஓட்டல்களில் வியாபாரம் இல்லாதது முக்கியக் காரணம். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சி கள் நடக்கவில்லை. காய்கறிகள் விலை குறைந்ததால் எங்களுக்கும் கமிஷன் கிடைக்கவில்லை. காய் கறிகள் அழுகாமல் இருக்க சில் லறை வியாபாரிகளுக்குக் கட னுக்கு தூக்கி விடுகிறோம்.
எங்களை விட விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். லாபம் கிடைக்காவிட்டாலும் பறிப்புக் கூலி, போக்குவரத்துச் செலவுக்குக் கூட அவர்களுக்கு கட்டுபடியான விலை கிடை க்கவில்லை. கடைசியில் ஏமாற் றத்துடனே திரும்பிச் செல்கின் றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தக்காளி(கிலோ)..........ரூ. 10
வெண்டைக்காய்......... ரூ. 7 கத்தரிக்காய்................ரூ. 12
பெரிய வெங்காயம்......ரூ. 10
சின்ன வெங்காயம்... ரூ. 30
முட்டைகோஸ்..............ரூ. 15
உருளைக்கிழங்கு........ரூ. 20
கேரட்...........................ரூ. 20
பச்சை மிளகாய்...........ரூ. 18
கருவேப்பிலை.............ரூ. 25
புதினா..........................ரூ. 20
பீட்ரூட்..........................ரூ. 12
சவ்சவ்..........................ரூ. 10
சேனைக் கிழங்கு........ரூ. 30
முருங்கைக்காய்..........ரூ. 20
மாங்காய்......................ரூ. 15
புடலங்காய்...................ரூ. 12
பாகற்காய்....................ரூ. 25
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago