புதுச்சேரியின் புறநகர் மற்றும் காரைக்காலில் விவசாயம் முக்கியத் தொழில். வேளாண்மையின் உபதொழி லான கால்நடை வளர்ப்பிலும் ஏராளமானோர் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக கிராமப் பகுதிகளான திருக்கனூர், கூனிச்சம்பட்டு உள்ளிட்ட கிராமப் பகுதிகள், நகரத்தையொட்டியுள்ள சில பகுதிகளில் ஆடு, மாடு, கருங்கோழிகள் அதிகளவில் வளர்க்கப் படுகின்றன. கரோனா ஊரடங்கால் கால்நடைத் தீவனங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக கிராம மக்கள் கூறியது: ஊரடங்குக்கு முன்பாக ஆயிரம் ரூபாய்க்கு விற்ற ஒரு மூட்டை மாட்டுத் தீவனம் ரூ.1,500 ஆக உயர்ந்துள்ளது.
கோதுமை தவிடும் ஒரு மூட்டை ரூ.1,050-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்ந்துள்ளது. புண்ணாக்கு கிலோ ரூ.40-ல் இருந்து ரூ.55 ஆக அதிகரித்துள்ளது. கோழித்தீவனம் விலையும் ரூ.100 வரை அதிகரித்துள்ளது.
விலை அதிகரித்த போதிலும் தவிடு, புண்ணாக்கு மற்றும் தீவனத்துக்கு தட்டுப்பாடும் நிலவுகிறது.
இதனால் நாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு ஒருவேளை தான் உணவு தரமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இத னால், கறவை மாடுகளில் பால் வற்றிவிட்டது. இந்த அசாதாரண நேரத்தில், அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தந்தால் உதவியாக இருக்கும் என்றனர்.
பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் கிராம பெண்கள் கூறியபோது, “மாட்டுத் தீவனத்துக்கு ஒரே விலையை நிர்ணயம் செய்து அரசு அறிவிக்க வேண்டும். கூட்டுறவுத் துறை மூலம் அதைத் தர வேண்டும். இல்லாவிட்டால் கால்நடைகளை கிடைத்த விலைக்கு விற்கும் நிலை உருவாகும். அரசு இதை தடுப்பது அவசியம்” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago