சிவகங்கை மாவட்டத்தில் கரோனாவில் இருந்து ஒருவர் குணமடைந்தார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு, அழைத்து வரப்பட்டனர். அவர்கள் காரைக்குடி அமராவதிப் புதூர் , சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு ஏற்கெனவே எடுக்கப்பட்ட பரிசோதனையில் மகாராஷ்டிரா, மேற்குவங்க மாநிலங்களில் இருந்து வந்த 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் சென்னையில் பரிசோதனை செய்துவிட்டு முடிவு அறிவிப்பதற்குள் காளையார்கோவில் வந்த தீயணைப்பு வீரர் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
» பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சபரிராஜனின் ஜாமீன் மனு தள்ளுபடி
» தூத்துக்குடி நகரில் 8 நாட்களுக்குப் பிறகு இளைஞருக்கு கரோனா தொற்று உறுதி
அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஏற்கனவே 14 பேர் குணமடைந்தனர். இன்று ஒருவர் குணமடைந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வீட்டிற்கு வழியனுப்பி வைத்தார்.
மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், நிலைய மருத்துவ அலுவலர்கள் மீனா, முகமதுரபீக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தற்போது 5 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago