திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் சென்னை டிஜிபி அலுவலகம் சென்று டிஜிபி ஜே.கே.திரிபாதியிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக காவல்துறை அதிகாரிகள் சிலர் ஆளுங் கட்சியின் உத்தரவுப்படி நடந்து திமுகவினரின் மீது கொடுக் கப்படும் புகார்கள் மீது பொய் யான வழக்குப் பதிந்து கைது செய்கின்றனர். ஆனால், அதிமுகவினர், பாஜகவினர் மீது புகார் கொடுத்து அதில் முகாந்திரம் இருந்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
பேச்சுரிமை, எழுத்துரிமையின் அடிப்படையில் திமுகவினர் அரசியல் பிரச்சாரத்தைக் குறிப் பாக சமூக ஊடகங்களில் மேற்கொண்டதற்காக பொய் வழக்குகள் புனைவதைத் தவிர் க்க வேண்டும். ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியி னருக்கு எதிராகப் புகார்கள் கொடுக்கப்படும்போது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யவில்லையெனில் ஏன் பதிவு செய்யவில்லை என்ற காரணத்தை புகார்தாரருக்குத் தெரிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கட்டளையை தமிழக காவல்துறை மீறுகிறது. எனவே, அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் முறையான வழிமுறைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநி திமாறன் ஆகியோர் மீது பல்வேறு இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பற்றியும் தனியாக இன்னொரு புகாரை டிஜிபியிடம் கே.என்.நேரு கொடுத் தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago