சென்னைக்குப் பயிற்சி சென்றுவந்த மதுரை சிறைக் கைதிகள் 5 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் மார்ச் மாதம் சிறை கைதிகளுக்கான 3 வார கால சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
மதுரை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட மத்திய சிறைகளில் இருந்து தலா 5 கைதிகள் பங்கேற்றனர்.
கரோனா தடுப்புக்கான ஊரடங்கால் வெளியில் இருந்து சென்ற கைதிகள் பயிற்சி முடிந்தும் உடனே அவரவர் சிறைகளுக்கு திரும்ப முடியாத சூழலில் சமீபத்தில் அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
» சொந்த ஊருக்கு அனுப்ப வலியுறுத்தி காவல்நிலையத்தை முற்றுகையிட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள்
» ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி வழக்கு: மே 29-க்கு தள்ளிவைப்பு
கடலூர், திருச்சியில் இருந்து பங்கேற்ற கைதிகளில் தலா ஒருவருக்கு மருத்துவ பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து பிற மத்திய சிறைகளில் இருந்து பயிற்சியில் பங்கேற்ற கைதிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இதன்படி, மதுரை மத்திய சிறையில் இருந்தும் பயிற்சிக்கு சென்று திரும்பிய 5 கைதிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான முடிவு இன்னும் வெளிவரவில்லை.
இதன்பின்னரே தொற்று இருக்கிறதா என்பது தெரியவரும் என, சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago